Images
  • klia
    (படம்: AFP/Manan Vatsyayana)

மலேசியா: விமான நிலையத்தில் மீண்டும் சூழ்ந்த தேனீக்களைப் பாதுகாப்பாக அகற்றிய அதிகாரிகள்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு மீண்டும் படையெடுத்தன தேனீக்கள்.

சென்ற முறை குறைகூறலுக்கு உள்ளான காவல்துறை இம்முறைப் பிரச்சினையைக் கவனமாகக் கையாண்டது.

முதலில் சூழ்ந்த தேனீக்களால் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சி, அவற்றைப் பூச்சிக்கொல்லியின் துணையுடன் அகற்றினர் அதிகாரிகள்..

பணி வெற்றிகரமாக முடிந்தாலும், இணையவாசிகள் அதனைக் கடுமையாகக் குறைகூறினர்.

இரண்டாம் முறை விமான நிலையத்திற்குள் புகுந்த தேனீக்களை அகற்ற மலேசிய அதிகாரிகள் வேறொரு உத்தியைக் கையாண்டனர்.

Penyelamat Lebah என்ற தேனீ மீட்புச் சேவைகளை வழங்கும் தொண்டூழியக் குழுவை அதிகாரிகள் நாடினர்.

மலேசியா: விமான நிலையத்தில் மீண்டும் சூழ்ந்த தேனீக்களைப் பாதுகாப்பாக அகற்றிய அதிகாரிகள்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு மீண்டும் படையெடுத்தன தேனீக்கள்.


அதன்மூலம், தேனீக்களை வெற்றிகரமாக அகற்றி அவற்றை இடமாற்றம் செய்துள்ளனர் மலேசிய அதிகாரிகள்.

ஏற்கெனவே அரிதாகிவரும் தேனீக்களைப் பாதுகாப்பான முறையில் அகற்றியதற்காக அதிகாரிகளுக்கு இப்போது பாராட்டு மழை பொழிகிறது இணையத்தில்.  

Top