Images
  • india ele
    கோப்பு படம்: AFP

இந்தியா: கொல்கத்தா வீதிகளில் அடிதடியில் ஈடுபட்ட கட்சி உறுப்பினர்கள்

இந்தியாவின் கொல்கத்தா நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே-19) பொதுத்தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இடம்பெறவிருக்கிறது.

ஆனால் தற்போது அங்கு மாநிலத்தின் இரு கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் வெடித்து வருவதால் கொல்கத்தாவில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு ஆதரவாக நேற்று நடந்த கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது, அதில் 10க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெற்றால் அவர் இரண்டாம் தவணைக்குப் பிரதமராகும் வாய்ப்பை அது உருவாக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Top