Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புவி ஈர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்த தென்கொரியா

கொரியத் தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -

கொரியத் தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புவி ஈர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகப் பாய்ச்சி சோதித்துள்ளதாகத் தென்கொரியா தெரிவித்துள்ளது.

கிழக்குக் கடற்பகுதியில் வடகொரியா 2 புவி ஈர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சிய சில மணிநேரத்தில் அந்தச் சோதனையை சோல் நடத்தியது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் இரு கொரியாக்களும் அந்தச் சோதனைகளை நடத்தியுள்ளன.

சுமார் 40 நிமிடங்களுக்குத் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னைத் (Moon Jae In) திரு. வாங் யீ சந்தித்துப் பேசினார்.

கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலைப்பதற்குச் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாய்த் தென்கொரிய அதிபர் தெரிவித்தார்.

இரு கொரியாக்களையும் இணைக்கும் முயற்சிகள் பியோங்சாங்க் (Pyeongchang) குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தொடங்கின.

அவை பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் திரு. மூன் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்