Images
  • koreas meet
    (படம்: Pyeongyang Press Corps/Pool via REUTERS)

இரு கொரியாக்களுக்கு இடையில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அடுத்த சந்திப்பு

வடகொரியாவும் தென்கொரியாவும் வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளன. இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள பன்முன்ஜோம் நகரத்தில் சந்திப்பு நடைபெறும்.

இந்தத் தகவலைத் தென்கொரிய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கடந்த மாதம் பியோங்யாங்கில் நடைபெற்ற மாநாட்டில் இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த அவை திட்டமிட்டன.

தென்கொரிய ஒருங்கிணைய்பு அமைச்சர் சோ மியங்-கியோன் (Cho Myoung-gyon) திங்கட்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பை வழிநடத்துவார்.

இரு நாடுகள் கையெழுத்திட்ட பியோங்யாங் ஒப்பந்தத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து சந்திப்பில் ஆராயப்படும் என்று தென்கொரிய அமைச்சு கூறியது.

Top