Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கொரியப் போரால் பிரிந்த குடும்பங்கள் ஆகஸ்ட்டில் ஒன்றுகூடவிருக்கின்றன

கொரியப் போரால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைக்கும் ஒன்றுகூடல்களுக்கு இரு கொரியாக்களும் இணங்கியுள்ளன. 

வாசிப்புநேரம் -
கொரியப் போரால் பிரிந்த குடும்பங்கள் ஆகஸ்ட்டில் ஒன்றுகூடவிருக்கின்றன

படம்: AFP/POOL/The Korea Press Photographers Association

சோல்: கொரியப் போரால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைக்கும் ஒன்றுகூடல்களுக்கு இரு கொரியாக்களும் இணங்கியுள்ளன.

ஒன்றுகூடல், ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை, மவுண்ட் கும்காங் உல்லாசத் தளத்தில் நடைபெறும்.

2015ஆம் ஆண்டிற்குப் பிறகு அத்தகைய ஒன்றுகூடல் இடம்பெறுவது இதுவே முதல்முறை.

கொரிய தீபகற்பத்தில் அரசதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக அது கருதப்படுகிறது.

ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஒவ்வொரு தரப்பிலிருந்தும் 100 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்று Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்