Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கொரியப் பாட்டுகளுக்கு நடனமாடி 40 கிலோகிராம் குறைத்த ஆடவர்

தென்கொரியாவின் பிரபலமான K-pop இசை, மலேசிய ஆடவருக்கு உடல் எடையைக் குறைக்கப் பக்கபலமாக இருக்கிறது

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தென்கொரியாவின் பிரபலமான K-pop இசை, மலேசிய ஆடவருக்கு உடல் எடையைக் குறைக்கப் பக்கபலமாக இருக்கிறது. 154 கிலோகிராம் எடைகொண்ட இளைஞர் வாவான், ஏழு மாதங்களில் சுமார் 40 கிலோகிராம் எடையைக் குறைத்துள்ளார் .

பிரபல பெண்கள் குழுக்களின் பாடல்களுக்கு நடனமாடும் காணொளிகளை அவர் Twitterஇல் பதிவுசெய்து வருகிறார்.

விறுவிறுப்பான பாடல்களுக்கு ஆடுவது மட்டுமின்றி உணவையும் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைத்தார் இளைஞர். சர்க்கரை அளவைக் குறைத்ததுடன், மாவுச்சத்து அடங்கிய உணவு வகையையும் குறைத்தார். புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதுடன், அதிகம் தண்ணீர் குடிக்கத் தொடங்கியதாக Twitter பதிவில் அவர் குறிப்பிட்டார்.

ஆரோக்கியமாகச் சாப்பிட்டு K-pop பாடல்களுக்கு ஆடிய 9 நாள்களில் சுமார் 4 கிலோகிராம் எடையைக் குறைத்தார் வாவான். அக்டோபரிலிருந்து அவர் நடனத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆர்வத்துடன் ஆரோக்கியமாகும் ஆடவருக்கு இணையத்தில் ஆதரவு பெருகிவருகிறது.

தொடர்ந்து நடனத்தில் ஈடுபடுமாறு பலர் அவருக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்