Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: உயிரோவியக் கூடத்தில் தீ - ஆடவர் கைது

ஜப்பானியக் காவல்துறை, சென்ற ஆண்டு உயிரோவியக் கூடத்திற்கு வேண்டுமென்றே தீ மூட்டிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: உயிரோவியக் கூடத்தில் தீ - ஆடவர் கைது

(படம்: Kyodo/via REUTERS)

ஜப்பானியக் காவல்துறை, சென்ற ஆண்டு உயிரோவியக் கூடத்திற்கு வேண்டுமென்றே தீ மூட்டிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளது.

பிரபல Kyoto உயிரோவியக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த வன்செயல் ஜப்பான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஷின்கி அவ்பா (Shinki Aoba) எனும் ஆடவர் கட்டடத்தில் வல்லந்தமாக நுழைந்து, தரையில் எரிபொருளை ஊற்றித் தீ மூட்டியதாக நம்பப்படுகிறது.

சம்பவத்தில் 14 ஆண்களும் 22 பெண்களும் மாண்டனர். அதில் காயமுற்ற அவ்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இப்போது அவரது உடல்நிலை சீரானதால் அவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே தீ மூட்டிய குற்றத்தை அவ்பா ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த உயிரோவியக் கூடம் தனது படைப்புகளைத் திருடிக்கொண்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்