Images
  • easter
    படம்: AFP

இலங்கை - 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணை தொடங்கியது

இலங்கை நீதிமன்றம் அந்நாட்டில் நடந்த 2019 ஈஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

அந்தத் தாக்குதல் சம்பவங்களில் சுமார் 270 பேர் மாண்டனர்.

வேவுத்துறைகளிடம் இருந்து எச்சரிக்கைகள் வந்தும் விழிப்புடன் செயல்படவில்லை என இலங்கையின் முன்னாள் தேசியக் காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தரா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொலை, கொலை முயற்சி என 855 குற்றச்சாட்டுகள் ஜெயசுந்தரா மீது சுமத்தப்பட்டுள்ளன.

சுமார் 1,200 பேர் சாட்சி்களாக உள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ (Hemasiri Fernando) மீதும் அதே
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது இரண்டு பேரும் பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக 23,000-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் 267 பேர் மாண்டனர். அவர்களில் குறைந்தது 45 பேர் வெளிநாட்டினர்.

தாக்குதல் சம்பவத்தில் 500-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டது.

- Reuters/ga 

Top