Images
  • sri lanka (1)
    (படம்: REUTERS/Thomas Peter)

கலவரத்தில் ஈடுபட்ட கும்பலுடன் இணைந்து செயல்படவில்லை : இலங்கை ராணுவம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்நாட்டு இராணுவம் மறுத்துள்ளது.

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தவறிவிட்டது என்ற குறைகூறலையும் இராணுவம் நிராகரித்தது.

இதற்கிடையே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில், பௌத்த பிக்குகளும் அதில் கலந்து கொண்டனர்.

இந்த வாரம் இலங்கையின் சில பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தீவிர வலசாரி பௌத்தக் குழுக்களே காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.  

Top