Images
இலங்கை : முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் சகோதரர் அதிபர் தேர்தலில் போட்டி
இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் சகோதரர் வரும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
70 வயதாகும் திரு கோத்தபய ராஜபக்சே (Gota-baya Rajapaksa) எதிர்தரப்பு அணியைப் பிரதிநிதித்துப் போட்டியிடுவார்.
அவர் முன்னாள் தற்காப்பு அமைச்சராகப் பதவி வகித்தவர்.
இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவிருப்பதாகவும் பொருளாதாரத்தைத் புதுப்பிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கவிருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
நாட்டின் சிங்கள பௌத்த பெரும்பான்மையினர் மத்தியில் அவர் பிரபலமாக இருப்பதாக கவனிப்பாளர்கள் கருத்துரைத்தனர்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவேண்டும்.