Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை தேர்தலில் ராஜபக்ச வெற்றி

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்களின் ஆளும்  கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. 

வாசிப்புநேரம் -
இலங்கை தேர்தலில் ராஜபக்ச வெற்றி

(படம்: AFP / Department Of Government Information Media Division)

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்களின் ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பொதுஜனக் கட்சி 146 இடங்களில் வென்றுள்ளது. ஐந்து கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் அந்தக் கூட்டணிக்கு 225 இடங்கள் இருக்கும்.

சென்ற நவம்பரில் திரு. ராஜபக்சவின் சகோதரர் திரு. கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபரானார். அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.

அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதன் தொடர்பில் முந்தைய நிர்வாகம் கொண்டு வந்த விதிகளை, திரு.ராஜபக்ச சகோதரர்கள் மாற்ற விரும்புகின்றனர். தேர்தல் முடிவு அவர்கள், தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வாய்ப்பளித்திருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்