Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: லாவோஸ் தலைநகர் வியந்தியன் முடக்கம்

தென்கிழக்காசிய  நாடான லாவோஸின் (Laos) தலைநகர் வியந்தியன் (Vientiane), அதிகரித்துள்ள கிருமிப்பரவலால் முடக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

தென்கிழக்காசிய நாடான லாவோஸின் (Laos) தலைநகர் வியந்தியன் (Vientiane), அதிகரித்துள்ள கிருமிப்பரவலால் முடக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவில், வியந்தியனில் 24 மணி நேரத்தில் 467 பேருக்குச் சமூக அளவில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், அங்குக் கடுமையான முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கநிலைக் கட்டுப்பாடுகளின்படி, மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கவேண்டும். உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவதற்கும் மருத்துவமனைக்குச் செல்வதற்கும் மட்டுமே அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லலாம்.

கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இதர 7 மாநிலங்களுக்கிடையிலான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வியந்தியனுக்குள் நுழைவோர் இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.

லாவோஸில் இதுவரை 19,399 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது; 16 பேர் மாண்டனர்.

அந்நாட்டுச் சுகாதார அமைச்சு அளித்த தகவலின்படி, மக்களுக்கு 4.5 மில்லியன் முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்