Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை: மருத்துவ குணங்களுக்காகச் சிறுத்தையைக் கொன்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது

இலங்கையில் மருத்துவ குணங்களுக்காகச் சிறுத்தையைக் கொன்று விற்ற சந்ததேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

இலங்கையில் மருத்துவ குணங்களுக்காகச் சிறுத்தையைக் கொன்று விற்ற சந்ததேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுத்தை அருகி வரும் விலங்கு வகை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுத்தையின் மாமிசத்தை உண்டால் ஆஸ்துமா எனப்படும் மூச்சுத் திணறல் பிரச்சினை சரியாகி விடும் என்று அவ்வட்டாரத்தில் நம்பப்படுகிறது.

சந்தேக நபர்கள் கடந்த வியாழக்கிழமை
சிறுத்தையைப் பிடித்ததாகவும் அதன் பிறகு அதைக் கொன்று உடல் உறுப்புகளைப் பிரித்துவைத்துள்ளதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் தங்கியிருந்த இடத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.

சோதனையில் 17 கிலோகிராம் சிறுத்தை இறைச்சி கைப்பற்றப்பட்டது.

தலைநகர் கொழும்புவுக்குக் கிழக்கில் 175 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சில சிறுத்தைகள் அவ்வப்போது பொறிவைத்துக் கொல்லப்படுகின்றன.

இலங்கையில் 1,000-க்கும் குறைவான சிறுத்தைகளே உள்ளன.

சிறுத்தைகளை வேட்டையாடினால் அந்நாட்டில் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்