Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் ஊழல் சந்தேகத்தில் கைது

மலேசிய முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்கை (Lim Guan Eng) அந்நாட்டின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இன்று காலை அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. 

வாசிப்புநேரம் -
மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் ஊழல் சந்தேகத்தில் கைது

(கோப்புப் படம்: Bernama)

மலேசிய முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்கை (Lim Guan Eng) அந்நாட்டின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இன்று காலை அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

பினாங்கு மாநிலத்தில் 1.5 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்படும் கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்தின் ஊழல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கு முன், மலேசிய ஊழல் ஒழிப்புப் பிரிவுத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2008 லிருந்து 2018 வரை திரு. லிம் பினாங்கு மாநில முதலமைச்சராக இருந்தபோது கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் தொடங்கப்பட்டது. பட்டர்வர்த் (Butterworth) நகரை நாட்டின் தலைநிலத்துடன் இணைக்கும் வகையில் 7.2 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதைக் கட்டுமானப்பணிகள் 2016 இல் தொடங்கப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்