Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போயிங் 737 MAX ரக விமானங்களை வாங்கும் திட்டத்தைக் கைவிட எண்ணியுள்ள லயன் ஏர்

இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனம், 22 பில்லியன் டாலருக்கு போயிங் 737 MAX ரக விமானங்களை வாங்கும் திட்டத்தைக் கைவிட எண்ணியிருப்பதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனம், 22 பில்லியன் டாலருக்கு போயிங் 737 MAX ரக விமானங்களை வாங்கும் திட்டத்தைக் கைவிட எண்ணியிருப்பதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக, அது ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

எத்தியோப்பியாவில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் செயல்பாட்டில் இருந்த Boeing 737 MAX ரக விமானம் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியது.

அதைத் தொடர்ந்து, ஏர்பஸ் நிறுவனத்திற்கும் போயிங் நிறுவனத்திற்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது.

லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 MAX ரக விமானம் ஒன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் இருந்த 189 பேரும் மாண்டனர்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு லயன் ஏர் நிறுவனம், போயிங் நிறுவன விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வது பற்றி யோசிக்கத் தொடங்கியது.

ஆஃப்ரிக்காவில் நடந்த விபத்திற்குப் பிறகு லயன் ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ருஸ்டி கிரானா (Rusdi Kirana), போயிங் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதில் அதிக உறுதியாக இருக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்