Images
  • Lion air stop (1)
    (படம்: AFP/Adek BERRY)

Lion Air விபத்து: தேடல் மீட்பு பணி நிறுத்தம்

Lion Air விபத்தில் மாண்டவர்களைத் தேடி மீட்கும் பணியை (நவம்பர் 10) இன்றோடு நிறுத்திவிட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் இன்று கூறினர்.

இருப்பினும் அந்த விமானத்தின் இரண்டாம் தகவல் பதிவுப் பெட்டியைத் தேடும் பணி தொடரும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

விபத்தில் மாண்டோரின் மீட்கப்பட்ட உடல் பாகங்கள் 196 பைகளில் பொதியப்பட்டன. 79 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு இறுதிச்சடங்குக்காக அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

விபத்தில் மாண்டோரின் சடலங்கள் எதுவும்
நேற்று பிற்பகலுக்குப் பிறகு மீட்கப்படவில்லை என்று தேடல் மீட்பு பணிக் குழுத் தலைவர் முகமது சயுகி (Muhammad Syaugi) கூறினார்.

மாண்டோரின் குடும்பத்தாரிடம் அவர் மன்னிப்புக் கேட்டுகொண்டார்.

மாண்ட ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் Lion Air நிறுவனம் 102,058 டாலர் இழப்பீடு கொடுத்து வருகிறது.




 

Top