Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் மும்முரம்

பாகிஸ்தானில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடெங்கும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் மும்முரம்

(படம்: AFP/Banaras KHAN)

பாகிஸ்தானில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடெங்கும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கட்டுக்கடங்காத வெட்டுக்கிளிகளால் பில்லியன் கணக்கான டாலர் பெறுமானமுள்ள வேளாண் பயிர்கள் அழியும் தறுவாயில் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

பாகிஸ்தான் வயல்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு.

அரிசி, கோதுமை வயல்கள் என்றில்லை...

கீரை, காய்கறி, பழமரங்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை வெட்டுக்கிளிகள்.

விரட்டிப் பார்த்து, எதுவும் முடியாமல் விரக்தியில் உள்ளனர் விவசாயிகள்.

5,100 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவுக்குப் பரந்து விரிந்துள்ளது வெட்டிக்கிளிகளின் சாம்ராஜ்யம்.

இதேநிலை நீடித்தால், கோடைக்காலத்தில் இந்த வட்டாரத்தில் எந்தப் பயிரும் எஞ்சாது என்ற நிலை.

கிழக்கு பஞ்சாப், தென்புற சிந்து, தென்மேற்குப் பலுசிஸ்தான் பகுதிகளில், உணவுப் பாதுகாப்புக்கு இப்படியோர் அச்சுறுத்தல் இதுவரை நேர்ந்ததில்லையாம்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, ராணுவத்தின் துணையை நாடியுள்ளது வேளாண் அமைச்சு.

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில், அதிகாரிகளோடு கைகோத்துள்ளனர் ராணுவ வீரர்கள்.

வெட்டுக்கிளிகளின் இப்படி ஒரு படையெடுப்பை, கடந்த 30 ஆண்டுகளில் கண்டதில்லை என்கின்றனர் மூத்த விவசாயிகள்.

ஒரு கூட்டத்தில் சுமார் 50 மில்லியன் வெட்டிக்கிளிகள் வரை இருக்கும்.

நாளொன்றுக்குச் சுமார் 140 கிலோமீட்டர் வரை பறந்துசெல்லும் வெட்டுக்கிளிகளுக்குக் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்தான்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்