Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

இலங்கையில், 25 மாவட்டங்களில் உள்ளூர் வகை வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

படம்: REUTERS/Feisal Omar

இலங்கையில், 25 மாவட்டங்களில் உள்ளூர் வகை வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து புலம்பெயரும் வெட்டுக்கிளிகளால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால், உள்ளூர் வெட்டுக்கிளிகள் துரிதமாகப் பெருகியிருக்கலாம் என்பதை வேளாண்துறை நிபுணர்கள் சுட்டினர்

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள வாழை, தென்னை, ரப்பர் தோட்டங்கள் தற்போது கூடுதல் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரித்தனர்.

வெட்டுக்கிளிகள் முதிர்ச்சியடைந்து அவற்றுக்கு றெக்கைகள் முளைக்கும் முன்னரே அவற்றை அழிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பினால் வேளாண்துறை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்