Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

லொம்போக் நிவாரண முகாம்களில் பலருக்கு வயிற்றுப்போக்கு, ஆஸ்த்துமா

லொம்போக் நிவாரண முகாம்களில் பலருக்கு வயிற்றுப்போக்கு, ஆஸ்த்துமா

வாசிப்புநேரம் -
லொம்போக் நிவாரண முகாம்களில் பலருக்கு வயிற்றுப்போக்கு, ஆஸ்த்துமா

(படம்: Reuters)

இந்தோனேசியாவின் லொம்போக்கை நிலநடுக்கம் தாக்கி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அணுக முடியாத பகுதிகளில் பெரும்பாலோர் இருப்பதால், அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவது சவாலாக உள்ளது.

நிவாரண முகாம்களில் இருப்போர், வயிற்றுப்போக்கு, ஆஸ்த்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரப் பிரச்சினைகள் மேலும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.

தீவைத் தாக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, இந்தோனேசிய ஆகாயப் படை, 90 டன் நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்திருக்கிறது.

அந்தப் பேரிடரில் 380க்கும் அதிகமானோர் மாண்டனர்.
கிட்டத்தட்ட 390,000 பேர் வீடின்றி அவதியுறுகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்