Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவின் ஆக நீண்ட வர்த்தக விமானப் பயணம் - சாதனை படைத்த பெண் விமானிகள்

இந்தியாவின் ஆக நீண்ட வர்த்தக விமானப் பயணத்தை மேற்கொண்டு, சாதனை படைத்துள்ளனர் Air India விமானச் சேவை நிறுவனத்தின் பெண் விமானிகள்.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் ஆக நீண்ட வர்த்தக விமானப் பயணத்தை மேற்கொண்டு, சாதனை படைத்துள்ளனர் Air India விமானச் சேவை நிறுவனத்தின் பெண் விமானிகள்.

அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

பெண் விமானிகள் நால்வர் அடங்கிய குழு திங்கட்கிழமை (ஜனவரி 11) அன்று சாதனை படைத்தது.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ (San Francisco) நகரிலிருந்து இந்தியாவின் பெங்களூர் நகர் வரை விமானப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தூரம் 13,840 கிலோமீட்டருக்கும் மேல்.

அதுவே தென்னிந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை செல்லும் முதல் நேரடி விமானப் பயணம் என்று CNN குறிப்பிட்டது.

சாதனை படைக்கும் விமானப் பயணத்தில் தாங்கள் பங்கேற்றதில் மிகவும் பெருமிதம் கொண்டுள்ளதாக விமானிகள் கூறினர்.

இந்தியாவின் விமானிகளில் கிட்டத்தட்ட 12 விழுக்காட்டினர் பெண்கள்.

அது உலகின் ஆக உயர்ந்த விகிதம் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்