Images
  • walkways
    படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

200 கிலோமீட்டர் கூரைவேய்ந்த நடைபாதைகளை அமைக்கும் பணி நிறைவு

நிலப் போக்குவரத்து ஆணையம், Walk2Ride திட்டத்தின்கீழ் 200 கிலோமீட்டர் தொலைவுள்ள கூரைவேய்ந்த நடைபாதைகளை அமைக்கும் பணியை நிறைவு செய்துள்ளது.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளை பொதுப் போக்குவரத்து முனையங்களுடன் மேம்பட்ட வகையில் இணைப்பதே அத்திட்டத்தின் நோக்கம்.

MRT நிலையங்களை 400 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள பள்ளிகளுக்கும் மற்ற வசதிகளுக்கும் இணைப்பது திட்டத்தின் ஓர் இலக்கு.

அதோடு 200 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள இலகு ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், குறிப்பிட்ட பேருந்து நிறுத்துமிடங்கள் ஆகியவற்றையும் திட்டம் இணைக்கின்றது.

2013ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போக்குவரத்துப் பெருந்திட்டத்தின் கீழ் Walk 2 Ride திட்டம் நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் நிலையில் மேலும் அதிகமான கூரைவேய்ந்த இணைப்புகள் அமைத்துத் தரப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

தீவெங்கும் மொத்தம் 200 கிலோமீட்டர் தொலைவுக்குப் புதிதாகக் கூரைவேய்ந்த இணைப்புப் பாதை அமைக்கப்பட்டதன் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி வரும் புதன்கிழமை நடைபெறும்.

அதில் பிரதமர் லீ சியென் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.


Top