Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: முன்னைய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 2 அரசியல்வாதிகள் கைது

இலங்கையின் முன்னைய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 2 அரசியல்வாதிகள் உட்பட 7 பேரை மலேசியக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
மலேசியா: முன்னைய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 2 அரசியல்வாதிகள் கைது

(படம்: Malaysian authorities)

கோலாலம்பூர்: இலங்கையின் முன்னைய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 2 அரசியல்வாதிகள் உட்பட 7 பேரை மலேசியக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

மலேசியா 2014ஆம் ஆண்டிலிருந்து அந்த இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

அந்த அமைப்புக்கு வெளிநாட்டிலிருந்து புத்துயிர் கொடுக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படும் வேளையில் மலேசியாவின் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் 26 ஆண்டுப் பூசலை 2009ஆம் ஆண்டில் முடிவுக்குக் கொண்டுவந்தது.

நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் தனிநாட்டுக்காக அந்த இயக்கம் போராடி வந்தது.

மலேசியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தது, விளம்பரம் செய்தது, ஆள் சேர்த்தது, நிதி திரட்டியது, அவர்களுக்குத் தொடர்புள்ள ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய சந்தேகங்களின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2 மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் என மலேசியக் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் அயூப் கான் மைதீன் பிச்சை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளைக் கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவ்விருவரும் உரை நிகழ்த்தியதாகவும் அமைப்புக்கு ஆதரவாகத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாகவும் நம்பப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்