Images
  • maha thir ph

சொகுசுக் கப்பல் கூடிய விரைவில் விற்பனை செய்யப்படும்: மலேசியப் பிரதமர்

மலேசியா கைப்பற்றியுள்ள Equanimity உல்லாசப் படகு, கூடிய விரைவில் விற்பனை செய்யப்படும் என்று பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.

அந்த சொகுசுப் படகின் பராமரிப்புக்கு மட்டும் ஒரு மாதத்திற்குச் சுமார் 2 மில்லியன் ரிங்கிட் செலவிடவேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.

உல்லாசப் படகு தற்போதுள்ள நல்ல நிலையிலேயே நீடிக்கும் நோக்கில், பொதுமக்கள் அதைப் பார்வையிட அனுமதியில்லை என்றார் அவர்.

நூற்றுக்கணக்கானோரைப் படகுக்குள் அனுமதித்தால் படகுக்குச் சேதம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

காட்சிக்கு வைக்கப்பட்ட படகை அடுத்தவர்கள் வாங்க விரும்பாமற்போகக்கூடும் என்றும் செய்தியாளர்களிடம் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

Boustead உல்லாசப் படகு நிலையத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள படகின் மதிப்பு ஏறக்குறைய 1 பில்லியன் ரிங்கிட்.

இந்த உல்லாசப் படகு ஜோ லோ என்ற வர்த்தகரால், மலேசியாவிலிருந்து திருடப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டது என்பதை அமெரிக்கா உறுதி செய்திருப்பதாக டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார். 

Top