Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பொருள், சேவை வரிப் பற்றாக்குறை நினைத்ததைவிட அதிகம்: மலேசிய நிதியமைச்சர்

மலேசியாவில் பொருள், சேவை வரிப் பற்றாக்குறை, கடந்த மே மாத இறுதியில் 19.2 பில்லியன் ரிங்கிட் என்று அந்நாட்டு நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பொருள், சேவை வரிப் பற்றாக்குறை நினைத்ததைவிட அதிகம்: மலேசிய நிதியமைச்சர்

(படம்: Roslan RAHMAN/AFP)

மலேசியாவில் பொருள், சேவை வரிப் பற்றாக்குறை, கடந்த மே மாத இறுதியில் 19.2 பில்லியன் ரிங்கிட் என்று அந்நாட்டு நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.

சென்ற வாரம் கூறப்பட்டதைப் போல், அது 17.9 பில்லியன் ரிங்கிட் அல்ல என்றார் அவர்.

முன்னைய நிர்வாகம், முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்த 2 வாரங்களில் பொருள், சேவை வரியின் திரும்பக் கொடுக்கப்படும் தொகையை ஒப்படைக்கத் தவறியதாக அவர் கூறியிருந்தார்.

தேசிய முன்னணியின் நிர்வாகத்தில் பணப் புழக்க விகிதம் நலிவடைந்திருந்ததால் அந்தப் பற்றாக்குறை ஏற்பட்டதாக அமைச்சர் லிம் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வரவுகளுக்கும் செலவுகளுக்கும் இடையில் சமநிலையின்மை, வீண் செலவுகள், கடன்சுமை அதிகரிப்பு ஆகியவை அதற்குக் காரணம் என்றார் அவர்.

முன்னைய நிர்வாகம், கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்து, நிதியை வேறு காரணங்களுக்குச் செலவு செய்ததாகவும், பற்றாக்குறையை மறைத்து அதிகப்படியான தொகை இருப்பதாகக் காட்டியதாகவும் மலேசிய நிதியமைச்சர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்