Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: மக்காவ் சூதாட்ட வருமானத்தில் 94.5% சரிவு

COVID-19 நோய்த்தொற்று காரணமாக மக்காவ் அதன் சூதாட்டக்கூட வருமானத்தில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
COVID-19: மக்காவ் சூதாட்ட வருமானத்தில் 94.5% சரிவு

(படம்: REUTERS/Tyrone Siu)

COVID-19 நோய்த்தொற்று காரணமாக மக்காவ் அதன் சூதாட்டக்கூட வருமானத்தில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.

ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் ஜூலை மாதத்தில் மட்டும் 94.5 விழுக்காட்டுச் சரிவைச் சந்தித்ததாக அது தெரிவித்தது.

நோய்ப்பரவல் காரணமாக சூதாட்டக்கூடங்கள் வெறிச்சோடிக் கிடப்பதே அதற்குக் காரணம்.

தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதும் அங்கு செல்வோரின் எண்ணிக்கை அவ்வளவாக உயரவில்லை.

ஜூலை மாதத்தில் மக்காவிற்கு வந்தவர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்குச் சுமார் 2,000-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு அது 108,000ஆக இருந்தது.

சீனத் தலைநிலத்திலிருந்து பயணிகள் வருவதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்காவ் பொருளியலில் சூதாட்டத் துறை பெரும் பங்கு வகிக்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்