Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மாயாஜால வித்தையின் போது மாண்ட வித்தைக்காரர்

இந்தியாவில் நதியில் இறங்கி மாயாஜால வித்தை செய்ய முயன்ற வித்தைக்காரர் ஒருவர் மூழ்கி மாண்டார்.

வாசிப்புநேரம் -
மாயாஜால வித்தையின் போது மாண்ட வித்தைக்காரர்

(படம்: Reuters)

இந்தியாவில் நதியில் இறங்கி மாயாஜால வித்தை செய்ய முயன்ற வித்தைக்காரர் ஒருவர் மூழ்கி மாண்டார்.

அந்தச் சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹூக்ளி (Hooghly) நதியில் நடந்தது.

சாண்ச்சால் லாஹிரி (Chanchal Lahiri) என்ற வித்தைக்காரர் 6 பூட்டுகளைக் கொண்ட சங்கிலியால் கட்டப்பட்டு படகிலிருந்து நதியில் இறக்கிவிடப்பட்டார்.

ரசிகர்கள் அவரின் மாயாஜால சாகசத்தைப் பார்க்க 2 படகுகளில் இருந்தனர். மற்ற சிலர், நதிக்கரையிலும் அருகில் இருந்த ஹவுரா (Howrah) பாலத்திலும் இருந்தனர்.

லாஹிரி புரிய முயன்ற சாகசத்தில், நதிக்குள் இறக்கிவிடப்பட்ட பின், அவர் விலங்குகளிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக மேலே நீந்தி வரவேண்டும்.

ஆனால் 10 நிமிடங்கள் கழித்தும், அவர் நதியிலிருந்து வெளியே வருவதாகத் தெரியவில்லை.

அதனால் ரசிகர்கள் பீதியடைந்தனர்.

வித்தைக்காரரின் சடலம் அவர் நதிக்குள் இறக்கி விடப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

லாஹிரி சாகசத்தைப் புரியும் முன், கொல்கத்தா காவல்துறையிடம் அனுமதி பெற்றார்.

ஆனால், தண்ணீரில் இறக்கிவிடப்படுவார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்று காவல்துறையினர் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்