Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரிக்கும் COVID-19 சம்பவங்கள் - புதுக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

இந்தியா: மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரிக்கும் COVID-19 சம்பவங்கள் - புதுக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு 

வாசிப்புநேரம் -

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் COVID-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அங்கு புதுக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில், இரண்டாம் கட்ட நோய்ப்பரவல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், இரவு நேர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள், அம்மாநிலத்தின் பல நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் நாட்டின் வர்த்தக நிலையமான மும்பை நகரில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படவில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில், நேற்று மட்டும் சுமார் 7,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ஒப்புநோக்க, இம்மாதத் தொடக்கத்தில் அன்றாட எண்ணிக்கை, சுமார் 2,000 ஆக இருந்தது.

தற்போது இந்தியாவில் புதுவகைக் கொரோனா கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளதால், கவலை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் கூட்டங்களையும், அவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், இந்தியா, இரண்டாம் இடத்தில் உள்ளது.

அங்கு 11 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

156,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்