Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'ஜெருசலத்தை இஸ்ரேலியத் தலைநகராக அங்கீகரிக்க ஆஸ்திரேலியாவிற்கு உரிமை இல்லை': மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது

இஸ்ரேலியத் தலைநகராக மேற்கு ஜெருசலத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவுக்கு மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
'ஜெருசலத்தை இஸ்ரேலியத் தலைநகராக அங்கீகரிக்க ஆஸ்திரேலியாவிற்கு உரிமை இல்லை': மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது

(படம்: REUTERS/Soe Zeya Tun)

இஸ்ரேலியத் தலைநகராக மேற்கு ஜெருசலத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவுக்கு மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாய்லந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற பிறகு செய்தியாளார்களைச் சந்தித்தார்
டாக்டர் மகாதீர்.

அப்போது, ஜெருசலத்தை இஸ்ரேலியத் தலைநகராக அங்கீகரிக்க ஆஸ்திரேலியாவிற்கு உரிமை இல்லை என்று கூறினார்.

இஸ்ரேலியத் தலைநகராக மேற்கு ஜெருசலத்தை அங்கீகாரிப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் Scott Minister நேற்று அறிவித்தார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்படாதவரை ஆஸ்திரேலியத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து மாற்றப்போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நட்பு நாடுகளும், வர்த்தகப் பங்காளிகளும் ஆஸ்திரேலியாவின் முடிவைக் குறைகூறியுள்ளன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மேற்கு ஜெருசலத்துக்கு மாற்றினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்