Images
  • mahathir (4)
    (கோப்புப் படம்: REUTERS/Lai Seng Sin)

ஒரே நேரத்தில் வரியைக் குறைத்து மானியத்தை அதிகரிக்க முடியாது-மலேசியப் பிரதமர் மகாதீர்

மலேசிய அரசாங்கத்தால் ஒரே நேரத்தில் வரியைக் குறைத்து, மானியங்களை அதிகரிக்க முடியாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார்.

நாளை, புதிய நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள், வரியைக் குறைத்து மானியத்தை உயர்த்த வேண்டுமென விரும்புவதாய் நாளேடுகளில் படித்ததாக டாக்டர் மகாதீர் கூறினார்.

ஆனால் அது ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதை அவர் சுட்டினார். இரண்டுக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

வரியைக் குறைக்க வேண்டுமானால் அரசாங்கத்திடம் போதிய நிதி இருக்கவேண்டும். மானியங்களை அதிகரிக்க வேண்டுமென்றாலும் அரசாங்கத்திடம் பணம் இருக்கவேண்டும். ஆனால் வரியைக் குறைத்து நிதிவருவாயை இழந்தால் அரசாங்கம் எப்படி மானியத்தை அதிகரிக்க முடியுமென அவர் வினவினார்.

நாளைய வரவு செலவுத் திட்டத்தில் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்துப் பேசினார் டாக்டர் மகாதீர்.

மானியமும்கூட, உண்மையிலேயே யாருக்குத் தேவையோ அவர்களை இலக்காகக் கொண்டே வழங்கப்பட வேண்டுமென்றார் அவர்.

நிதியமைச்சர் Lim Guan Eng, நாளை வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வார். பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி தேர்தலில் அபார வெற்றிகண்ட பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது வரவு-செலவுத் திட்டம் இது... 

Top