Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதிய கட்சியின் பெயரை அறிவித்திருக்கும் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, தாம் நிறுவியிருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
புதிய கட்சியின் பெயரை அறிவித்திருக்கும் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர்

(படம்: REUTERS/Lim Huey Teng)

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, தாம் நிறுவியிருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

அது குறித்து, Malay Mail செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

டாக்டர் மகாதீர், கட்சிக்கு பெஜூவாங் (Pejuang) என்று பெயர் சூட்டியுள்ளார்.

'வீரர்' என்பது அதன் பொருள்.

கட்சி ஊழலை எதிர்த்து வீரத்துடன் போராடவேண்டும் என்பதற்காக அவ்வாறு பெயரிட்டதாய் அவர் கூறினார்.

அவரது முன்னாள் பெர்சாத்து(Bersatu) கட்சியின் உறுப்பினர்கள், பணத்திற்காகவும் பதவிக்காகவும், நம்பிக்கை துரோகம் செய்ததாக அவர் சாடினார்.

அவர்கள் அம்னோ (UMNO), Barisan Nasional ஆகிய கட்சிகளைச் சார்ந்து நிற்பதாக டாக்டர் மகாதீர் இணையப் பதிவில் குறிப்பிட்டதாய் Malay Mail தெரிவித்தது.

சமூக நலனைக் கண்டுகொள்ளாமல், ஊழலில் தோய்ந்த அரசியல் தலைவர்களால், மலாய்க்காரர்கள் நெடு நாட்களாகத் துன்பப்பட்டுவருவதாய் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்