Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர்- மலேசிய நிலப்போக்குவரத்தைச் சமாளிக்க மேலும் 3 அல்லது 4 பாலங்கள் தேவை - மலேசியப் பிரதமர்

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையில் எல்லைப் போக்குவரத்தைச் சுமுகமாக்க குறைந்தது 3 முதல் 4 பாலங்கள் தேவை என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்- மலேசிய நிலப்போக்குவரத்தைச் சமாளிக்க மேலும் 3 அல்லது 4 பாலங்கள் தேவை - மலேசியப் பிரதமர்

(படம்: Reuters, கோப்புப் படம்)

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையில் எல்லைப் போக்குவரத்தைச் சுமுகமாக்க குறைந்தது 3 முதல் 4 பாலங்கள் தேவை என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கு ஒன்றில் இடம்பெற்ற கேள்வி பதில் அங்கத்தில் அவர் அவ்வாறு கூறினார்.

போக்குவரத்தைச் சமாளிக்க பினாங்கு, தலைநிலத்துடன் தன்னை இணைப்பதற்குப் புதிய சுரங்கப் பாதையை அமைக்கத் திட்டமிடுவதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே நிலவும் போக்குவரத்து அதைவிட அதிகம் என்றார் அவர்.

தனக்குப் புரியாத ஒரு கராணத்திற்காக சிங்கப்பூர் மேலும் பாலங்களைக் கட்ட விரும்பவில்லை என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

1962ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீர் விலை தொடர்பாகவும் அவரிடம் கேட்டப்பட்டது .

அந்த விவகாரம் பற்றி இரு தரப்பினரும் "நாகரிகமடைந்த மக்களைப் போல் பேச்சு நடத்த முயல்வார்கள்" என்றார் அவர்.

தண்ணீர் விலையை மறுஆய்வு செய்வது குறித்த ஒருவர் மற்றவரின் நிலையை மேலும் புரிந்துகொள்ள இரு நாடுகளின் தலைமைச் சட்ட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்துவர் என்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்