Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: டாக்டர் மகாதீர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதற்குப் பிரதமர் முஹிதீன் கொடுத்திருக்கும் விளக்கம்

டாக்டர் மகாதீர் முகமது உள்ளிட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி விதிமுறைகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதாக மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

டாக்டர் மகாதீர் முகமது உள்ளிட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி விதிமுறைகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதாக மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் கூறியிருக்கிறார்.

டாக்டர் மகாதீர் முகமது, திரு. முக்ரிஸ் மகாதீர்(Mukhriz Mahathir), திரு. சயிட் சாதிக் சயிட் அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman), டாக்டர் மஸ்லீ மாலிக் (Maszlee Malik), திரு. அமிருதீன் ஹம்ஸா (Amiruddin Hamzah) ஆகிய ஐவரும் பெர்சாத்து கட்சி உறுப்பினர்கள் அல்லர் என்பதைக் கட்சித் தலைவருமான திரு. முஹிதீன் உறுதிப்படுத்தினார்.

அந்த ஐவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படவில்லை; ஆனால் கட்சி விதிமுறையை மீறியதால் அவர்கள் உடனடியாக உறுப்பினர் தகுதியை இழந்தனர் என்றார் திரு. முஹிதீன்.

இம்மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற மலேசிய நாடாளுமன்றக் கூட்டத்தில் ஐவரும் எதிர்த்தரப்பினருடன் அமர்ந்திருந்ததால் அவர்கள் உறுப்பினர் தகுதியை இழந்ததாக ஐவருக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்