Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர்-ஜொகூர் பாரு விரைவு ரயில் பாதை கட்டப்படும் - மலேசியப் பிரதமர் மகாதீர்

சிங்கப்பூர்-ஜொகூர் பாரு விரைவு ரயில்பாதையின் கட்டுமானத்தை மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது உறுதிசெய்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-ஜொகூர் பாரு விரைவு ரயில் பாதை கட்டப்படும் - மலேசியப் பிரதமர் மகாதீர்

(படம்: Bernama)


சிங்கப்பூர்-ஜொகூர் பாரு விரைவு ரயில்பாதையின் கட்டுமானத்தை மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது உறுதிசெய்துள்ளார்.

ஆனால் அதற்குக் காலஅவகாசம் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

மலேசிய தேசியப் போக்குவரத்துக் கொள்கையின் அறிமுக நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் பேசினார்.

விரைவு ரயில், ஜொகூர் பாருவிலுள்ள புக்கிட் சாகார் வட்டாரத்தைச் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் வட்டாரத்துடன் இணைக்கும்.

ஒவ்வொரு மணி நேரமும் அதன் ஒரு வழியில் மட்டும் 10,000 பயணிகள் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயிலின் கட்டுமானம் 2024ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ரயிலின் கட்டுமானப் பணிகளைச் செப்டம்பர் 30 வரை ஒத்திவைக்க இரு நாடுகளும் மே மாதம் ஒப்புக்கொண்டன.

அதனால் சிங்கப்பூருக்கு ஏற்பட்ட 600,000 வெள்ளி இழப்பீட்டைச் செலுத்த மலேசியா ஒப்புக்கொண்டது.

அதன்பின் கட்டுமானப் பணிகளின் தற்காலிக நிறுத்தம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்