Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பொருள் சேவை வரியை மறுஅறிமுகம் செய்ய மலேசியாவுக்கு எந்தக் காரணமும் இல்லை-டாக்டர் மகாதீர்

பொருள் சேவை வரியை மறுஅறிமுகம் செய்ய மலேசியாவுக்கு எந்தக் காரணமும் இல்லையென்று பிரதமர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
பொருள் சேவை வரியை மறுஅறிமுகம் செய்ய மலேசியாவுக்கு எந்தக் காரணமும் இல்லை-டாக்டர் மகாதீர்

(படம்: AFP/TASS Host Photo Agency/Valdimir Smirnov)


பொருள் சேவை வரியை மறுஅறிமுகம் செய்ய மலேசியாவுக்கு எந்தக் காரணமும் இல்லையென்று பிரதமர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார். 

வரிவிதிப்பில் அடிக்கடி மாற்றம் செய்தால், அது பொருளியலைப் பாதித்து முதலீட்டாளர் நம்பிக்கையைக் குறைத்து விடுமென்று அவர் சொன்னார்.

பலவிதமான வரிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், இரண்டுமுறை வரி செலுத்தவேண்டியிருப்பதாகக் கூறிப் பொதுமக்கள் பொருள் சேவை வரிபற்றிக் குறை கூறிவந்துள்ளதாகச் சொன்னார்.

அதன் காரணமாகவே, விற்பனை-சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டதாக, நாடாளுமன்றத்தில் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிலிருந்து அறிமுகமான 6 விழுக்காட்டுப் பொருள்சேவை வரிக்குப் பதிலாக, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்-தேதியிலிருந்து விற்பனை, சேவை வரி அறிமுகமானது.

பொதுமக்கள் நிராகரித்த பொருள் சேவை வரியைத் திரும்பக் கொண்டு வருவதைக் காட்டிலும், விற்பனை-சேவை வரியை மேம்படுத்துவதே அரசாங்கம் செய்ய வேண்டியது என்றார் மலேசியப் பிரதமர்.

மக்கள் விரும்பினால், பொருள் சேவை வரியை மலேசிய அரசாங்கம் மீண்டும் அறிமுகம் செய்யுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து டாக்டர் மகாதீர் பேசினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்