Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

1MDB குற்றங்களை நஜிப் மறுப்பது, நம்பமுடியாதது: பிரதமர் மகாதீர் முகமது

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், சர்ச்சைக்குரிய 1MDB நிதி தொடர்பான ஊழலுக்குத் தம்மைப் பொறுப்பாக்கக் கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
1MDB குற்றங்களை நஜிப் மறுப்பது, நம்பமுடியாதது: பிரதமர் மகாதீர் முகமது

(படம்: REUTERS/Lai Seng Sin)

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், சர்ச்சைக்குரிய 1MDB நிதி தொடர்பான ஊழலுக்குத் தம்மைப் பொறுப்பாக்கக் கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.

1MDB குற்றங்களை நஜிப் மறுப்பது, நம்பமுடியாத ஒன்று என்று டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

1MDB தொடர்பான எல்லா ஆவணங்களிலும், திரு. நஜிப் கையெழுத்திட்டிருப்பதை அவர் நினைவுகூர்ந்தார்.

கையெழுத்திட்ட ஆவணங்கள் பற்றி ஏதும் தெரியாது என்று திரு. நஜிப் கூறினால் யார் அதை நம்புவார்கள் என்று வினா எழுப்பினார் டாக்டர் மகாதீர்.

1MDB-க்கு உள்ள பத்தரை பில்லியன் டாலர் கடன் ஆவணங்களிலும், திரு. நஜிப் கையெழுத்திட்டுள்ளார்.

"அதுபற்றித் தெரியாது என்று அவர் சொன்னால், கையெழுத்திடுவதன் பொருள் என்னெவென்றே திரு. நஜிப்புக்குத் தெரியவில்லை என்றுதான் பொருள்படும். மக்களை எப்போதுமே திரு. நஜிப் முட்டாள்கள் என்றே நம்புகிறார்"- என்று டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

1MDB நிதிக் கணக்கிலிருந்து திரு. நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மில்லியன் கணக்கான டாலர் மாற்றப்பட்டதைக் குறித்து டாக்டர் மகாதீரால் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கம் விசாரித்து வருகிறது.

காசோலைகளிலும் ஆவணங்களிலும், திரு. நஜிப்பின் கையொப்பம் இருப்பதை ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பேசிய டாக்டர் மகாதீர் சுட்டினார்.

திரு. நஜிப் தாம் குற்றம் செய்யவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து, பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தளங்களில் திரு. நஜிப்புக்கு எதிராக மலேசியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்