Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'2023இல் அடுத்த பொதுத்தேர்தல் நடந்தால் போடியிடப் போவதில்லை': மகாதீர் முகமது

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, நாட்டின் அடுத்த பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு நடைபெற்றால் அப்போது தாம் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
'2023இல் அடுத்த பொதுத்தேர்தல் நடந்தால் போடியிடப் போவதில்லை': மகாதீர் முகமது

(கோப்புப் படம்: REUTERS/Lim Huey Teng)

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, நாட்டின் அடுத்த பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு நடைபெற்றால் அப்போது தாம் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமக்கு அப்போது 98 வயது ஆகியிருக்கும் என்பதை அவர் சுட்டினார்.

இருப்பினும், இப்போது தாம் அமைக்கும் Pejuang கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கவும், தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவும் டாக்டர் மகாதீர் உறுதியளித்தார்.

லங்காவியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.

கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தமக்குப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிய நிலையில்,
நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டுமா என்று டாக்டர் மகாதீரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த டாக்டர் மகாதீர், கிருமிப் பரவல் சூழலில் அத்தைகைய திட்டம் அபாயகரமானது என்று கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்