Images
  • Mahathir on equality (2)
    (படம்: Bernama)

மலேசியாவின் செல்வம் அனைத்து இனத்தவருக்கும் சரிசமமாக விநியோகிக்கப்பட வேண்டும்: மகாதீர் முகமது

மலேசியாவின் செல்வம் அனைத்து இனத்தவருக்கும் சரிசமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது இன்று (ஜனவரி 14) கூறியுள்ளார்.

இன ஒற்றுமையை மேம்படுத்த இன்னும் அதிக முயற்சிகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

சில குடிமக்கள் பின்தங்கியிருந்தால் மலேசியா வெற்றிபெற்ற நாடாகத் தன்னைக் கருதிக் கொள்ள முடியாது என்று டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலகத்தில் மாதந்தோறும் இடம்பெறும் கூட்டத்தில் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.

அனைத்து இனத்தவர் இடையிலும் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலேசியப் பிரதமர் வலியுறுத்தினார்.


 

Top