Images
  • mahathir (4)
    (படம்: Reuters, கோப்புப் படம்)

'பேரணியில் கலந்துகொள்வோர் குழப்பம் விளைவிக்கவேண்டாம்': மலேசியப் பிரதமர் மகாதீர்

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, கோலாலம்பூரில் இன்று பின்னேரம் நடைபெறவிருக்கும் பேரணியில் கலந்துகொள்வோரைக் குழப்பம் விளைவிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மெர்டேக்கா சதுக்கத்தில் நடக்கும் பேரணியில், சுமார் அரை மில்லியன் பேர் பேரணியில் திரள்வர் என்று அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் கூறுகின்றன.

பேரணியைத் தடுத்து நிறுத்துவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல என்றும், அத்தகைய நடைமுறை ஜனநாயகத்துக்குப் புறம்பானது என்றும் டாக்டர் மகாதீர் கூறியதாக Star நாளேட்டின் இணையத்தளம் கூறியது. காணொளி மூலம் மலேசியப் பிரதமர் விடுத்துள்ள செய்தி YouTubeஇல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவிலிருந்தே தலைநகருக்கு வந்து-செல்வோரை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கோலாலம்பூர் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.  

Top