Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய அரசாங்கம் அனைத்து சமயங்களின் உணர்வுகளையும் கவனமாகக் கையாளும் - பிரதமர் மகாதீர்

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் அனைத்து சமயங்களின் உணர்வுகளையும் மிகக் கவனமாகக் கையாளும் என்று அந்நாட்டின் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
மலேசிய அரசாங்கம் அனைத்து சமயங்களின் உணர்வுகளையும் கவனமாகக் கையாளும் - பிரதமர் மகாதீர்

( படம்: Facebook/Dr Mahathir Mohamad )

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் அனைத்து சமயங்களின் உணர்வுகளையும் மிகக் கவனமாகக் கையாளும் என்று அந்நாட்டின் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

மலேசியர்கள் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என்று அவர்
கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரம், ICERD பேரணி ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து பிரதமர் மகாதீர் அவ்வாறு கூறினார்.

பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ சமயங்களைச் சேர்ந்த பேராளர்கள், தமது அலுவலகத்தில் தம்மைச் சந்தித்ததாக அவர் தமது Facebook பதிவில் தெரிவித்தார்.

வேறுபாடுகள் இருந்தாலும் இன நல்லிணக்கம், சமய சகிப்புத்தன்மை ஆகியவற்றில் மற்ற நாடுகளைவிட மலேசியா அதிக அமைதியைக் கடைப்பிடிப்பதாக டாக்டர் மகாதீர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்