Images
  • Yatch
    ( படம்:  Reuters)

1MDB மோசடியைப் பிரதிபலிக்கும் சொகுசுக் கப்பலைப் பார்வையிட்டார் மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது 1MDB மோசடியைப் பிரதிபலிக்கும் சொகுசுக் கப்பலான Equanimityயைப் பார்வையிட்டுள்ளார்.

சென்ற செவ்வாய்க்கிழமை மலேசியக் கடல் பகுதிக்கு வந்தது முதல் கிள்ளான் துறைமுகத்தில் இருக்கும் அதை டாக்டர் மகாதீர் ஒரு மணிநேரம் சுற்றிப் பார்த்தார்.

பின்னர், தொழில் அதிபர் ஜோ லோ (Jho Low) அந்தக் கப்பலை வாங்கியதை அமெரிக்கா உறுதிப்படுத்தியிருப்பதாக டாக்டர் மகாதீர் கூறினார்.

மலேசியாவில் இருந்து திருடப்பட்ட பணத்தைக் கொண்டு அந்தக் கப்பல் வாங்கப்பட்டதையும் அமெரிக்கா உறுதிப்படுத்தியது.

கப்பலைப் பராமரிக்கும் செலவு ஒரு மாதத்திற்கு 2 மில்லியன் ரிங்கிட் என்பதால், அதை விரைவில் விற்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாகவும் டாக்டர் மகாதீர் கூறினார்.

அதனால் அதை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதால் அதில் நுழைவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். 

Top