Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் பிரதமரை முடிவு செய்ய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்

மலேசியாவில் அடுத்த பிரதமரை முடிவுசெய்ய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த மாதம் 2-ஆம் தேதி நடத்தப்படும் என்று டாக்டர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
மலேசியாவில் பிரதமரை முடிவு செய்ய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்

படம்: Bernama

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசியாவில் அடுத்த பிரதமரை முடிவுசெய்ய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த மாதம் 2-ஆம் தேதி நடத்தப்படும் என்று டாக்டர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார்.

தற்போது எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை இல்லாததால், மன்னரால் பிரதமரை முடிவு செய்ய இயலவில்லை என்றார் அவர்.

COVID-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட துறைகளுக்குக் கைகொடுக்க, 20 பில்லியன் ரிங்கிட் பொறுமானமுள்ள பொருளியல் ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டத்தை வெளியிட்டார் டாக்டர் மகாதீர். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் முடிவு எட்டப்படாவிட்டால் திடீர்த் தேர்தல் நடத்தப்படலாம் என்றார் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பு வகிக்கும் டாக்டர் மகாதீர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்