Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பக்கட்டான் ஹரப்பான் தலைவர்கள் குழு விருப்பம் தெரிவித்தால் பதவி விலகத் தயார்: மலேசியப் பிரதமர் மகாதீர்

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய மன்றம் விருப்பம் தெரிவித்தால் தாம் பதவி விலகத் தயார் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
பக்கட்டான் ஹரப்பான் தலைவர்கள் குழு விருப்பம் தெரிவித்தால் பதவி விலகத் தயார்: மலேசியப் பிரதமர் மகாதீர்

(படம்: Bernama)

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய மன்றம் விருப்பம் தெரிவித்தால் தாம் பதவி விலகத் தயார் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக டாக்டர் மகாதீர் பதவி விலகுவது குறித்து அவரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு பதிலளித்த டாக்டர் மகாதீர், பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியிலுள்ள கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை உள்ளடக்கிய மன்றம், தம்மைப் பதவி விலக வேண்டும் என்று எப்போது கூறினாலும் அதை நிறைவேற்றத் தயார் என்று கூறினார்.

பிரதமர் பதவியை கெ அடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் டாக்டர் மகாதீர் எப்போது ஒப்படைப்பார் என்று அவரது கட்சியினர் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

ஆட்சியமைத்த இரண்டு ஆண்டுகளில் திரு. அன்வாரிடம் பிரதமர் பொறுப்பு ஒப்படைக்கப்படுமெனத் தேர்தல் பிரசாரத்தின்போது உறுதி கூறப்பட்டது.

ஆனால் அதற்குரிய அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

நவம்பர் மாதம் மலேசியாவில் ஏப்பெக் உச்சநிலைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அது முடிந்தபிறகு, பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கத் தயார் என டாக்டர் மகாதீர் சில மாதங்களுக்குமுன் கூறியிருந்தார்.

வரும் மே மாதத்துடன் மலேசியாவில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியமைத்து 2 ஆண்டுகள் நிறைவுபெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்