Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரத்தால் சர்ச்சை

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று முக ஒப்பனையை அகற்றும் டிஷ்யூ தாள்கள் விளம்பரத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. நிறுவனம், அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனா: பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரத்தால் சர்ச்சை

(படம்: AFP/VIVEK PRAKASH)

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று முக ஒப்பனையை அகற்றும் டிஷ்யூ தாள்கள் விளம்பரத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. நிறுவனம், அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது.

Purcotton எனும் நிறுவனத்தின் அந்த விளம்பரத்தில், தம் முக ஒப்பனையை நீக்கி, தன்னைப் பின்தொடர்ந்த ஆடவரைப் பயமுறுத்துகிறார் ஒரு பெண்.

முக ஒப்பனையை நீக்கிய பின், அந்தப் பெண் ஓர் ஆண் போல் தோற்றமளிக்கிறார்.

அத்துடன் 'வாந்தி' என்ற சொல் சீனத்தில் தோன்றுகிறது.

அது பாலியல் தொந்தரவுக்குப் பெண்கள் தான் காரணம் என்பது போல் சித்தரிப்பதாகப் பல இணையவாசிகள் குறைகூறியதை BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

மேலும் சிலர், பெண்கள் முக ஒப்பனையின்றி அழகில்லை என்ற கருத்தை அந்த விளம்பரம் முன் வைப்பதாக விமர்சித்தனர்.

அதை அடுத்து, அந்த நிறுவனத்தின் பொருள்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக BBC தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்