Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாஹாங் மாநில சுல்தானுக்கு மலேசிய மாமன்னராகும் வாய்ப்பு

மலேசியாவின் பாஹாங் மாநில சுல்தானாக துங்கு அப்துல்லா அடுத்த வாரம் பதவியேற்கவிருக்கிறார். 

வாசிப்புநேரம் -

மலேசியாவின் பாஹாங் மாநில சுல்தானாக துங்கு அப்துல்லா அடுத்த வாரம் பதவியேற்கவிருக்கிறார்.

அதன் மூலம் அவர் மலேசிய மாமன்னராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஹாங்கின் பெக்கான் அரண்மனையில் சுல்தானின் பதவியேற்புச் சடங்கு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஹாங் சுல்தானாக இருக்கும் அஹ்மட் ஷா உடல் நலம் குன்றியிருப்பதால் அவருடைய மகன் துங்கு அப்துல்லா அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

நேற்று கோலாலம்பூரில் கூடிய பாஹாங் அரச மன்றம் துங்கு அப்துல்லாவை சுல்தானாக ஒருமனதாய் ஏற்றுக்கொண்டது.

மலேசிய மாமன்னராக இருந்த சுல்தான் ஐந்தாம் முஹம்மது அண்மையில் பதவியைத் துறந்தார்.

அதனைத் தொடர்ந்து நாட்டின் புதிய மாமன்னரைத் தெரிவுசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்