Images
  • mahathir rejects
    (படம்:Reuters/Issei Kato/Files)

மலாய்ச் சமூகம் அதன் கௌரவத்தை மீட்டுக்கொள்ளும் முயற்சிகளைச் சொந்தமாக எடுக்கவேண்டும்: மலேசியப் பிரதமர்

மலேசிய பிரதமர் மஹாதீர் முகமது, மலாய் சமூகம் அதன் கௌரவத்தை மீட்டுக்கொள்வதற்கான முயற்சிகளைச் சொந்தமாக மேற்கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளார்.

அந்த முயற்சியை மற்றவர்கள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்த்துக் காத்திருப்பதை நிறுத்தும்படி மலாய் சமூகத்தினரை அவர் கேட்டுக்கொண்டார்.

மலாய் கௌரவம் தொடர்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மஹாதீர் அந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர் அரசாங்கத்தை வழிநடத்தினாலும், சமூகத்தின் மேம்பாட்டிற்காக அனைத்து சமூகத்தினரும் ஒத்துழைக்கவில்லை என்றால், அந்தச் சமூகத்தின் கௌரவம் முன்னிருந்த நிலைக்குத் திரும்பாது என அவர் விளக்கினார்.

வாய்ப்புகளை மட்டுமே அரசாங்கத்தால் வழங்க முடியும் என்பதைச் சுட்டிய மலேசிய பிரதமர், அதை பயன்படுத்திக்கொள்ள மலாய் சமூகம் தயாராய் இருக்கவேண்டும் என்றார்.

நாட்டை திறன்பட வழிநடத்தும் ஆற்றலை மலாய் சமூகம் பெறும் நிலையில், அதன் கௌரவம் மீண்டும் நிலைநாட்டப்படும் என டாக்டர் மஹாதீர் அறிவுறுத்தினார்.
 

Top