Images
  • malaysia (1)
    படம்: REUTERS 

COVID-19: மலேசியாவில் புதிய உச்சம் - சுமார் 15,600 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி

மலேசியாவில் புதிதாக சுமார் 15,600 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது.

கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து, அதுவே ஆக அதிகமான அன்றாட எண்ணிக்கை.

பாதிக்கும் அதிகமான சம்பவங்கள், கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாயின.

மலேசியாவில், கடந்த மாதம் முதல் தேதியிலிருந்து முடக்கநிலை நடப்பில் உள்ளது.

இந்நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு, மலேசிய நாடாளுமன்றம், வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

கிருமித்தொற்றுச் சூழலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றி, அப்போது விவாதிக்கப்படும்.  

Top