Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நோன்புப் பெருநாளுக்காக மலேசிய ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு ராஜ உபசரிப்பு!

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசிய ஏர்லைன்ஸ் குறிப்பிட்ட விமானப் பயணங்களில் பெர்லிஸ் அரச குடும்பத்துக்குரிய உணவைப் பரிமாறும்.

வாசிப்புநேரம் -

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசிய ஏர்லைன்ஸ் குறிப்பிட்ட விமானப் பயணங்களில் பெர்லிஸ் அரச குடும்பத்துக்குரிய உணவைப் பரிமாறும்.

ஜூன் 15இலிருந்து ஜூன் 17 வரை இந்தச் சிறப்பு உணவுப் பட்டியல் வழங்கப்படும்.

பெர்லிஸ் மாநிலப் பட்டத்து இளவரசர் சையது ஃபைஸுதீன் புத்ரா ஜமாலுலாய்லும் அவரது மனைவியும் பட்டியலில் இடம்பெறும் உணவு வகைகளை நிர்ணயித்ததாக நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மலேசியாவின் சிறப்புகளை வெளிக்காட்டும் Best of Malaysia திட்டத்தின் ஓர் அம்சமாக நிறுவனம் இந்தச் சிறப்பு உணவுப் பட்டியலை வழங்குகிறது.

கோலாலாம்பூரிலிருந்து லண்டனுக்கு முதல் பிரிவு, business பிரிவு ஆகியவற்றில் பயணம் செய்யும் MH2, MH4 விமானங்களில் குர்மா டாகிங் (Kurma Daging) பரிமாறப்படும்.

அதேபோல் கோலாலாம்பூரிலிருந்து ஜெத்தாவுக்குச் செல்லும் MH150, கோலாலம்பூரிலிருந்து டாக்காவுக்குச் செல்லும் MH112, MH196 விமானங்களின் business பிரிவுப் பயணிகளுக்கு குர்மா டாகிங் பரிமாறப்படும்.

பெர்லிஸ் அரச குடும்பத்தினருக்குப் பிடித்த உணவு அது என்று நிறுவனம் கூறியது.

அதே விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் economy பிரிவுப் பயணிகளுக்கு குர்மா ஆயாம் (கோழி குர்மா) பரிமாறப்படும்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்