Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் முடி திருத்தும் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

மலேசியாவில் முடி திருத்தும் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

வாசிப்புநேரம் -
மலேசியாவில் முடி திருத்தும் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

படம்: REUTERS

மலேசியாவில் வரும் ஜூன் 10-ஆம் தேதியிலிருந்து, முடி திருத்தும் கடைகளும், சிகை அலங்கார நிலையங்களும் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

என்றாலும், கிருமிப்பரவல் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை அவை பின்பற்ற வேண்டும்.

முடிதிருத்தும் கடைகள், சிகை அலங்கார நிலையங்கள், ஆகியவற்றுக்கான துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5 பில்லியன் ரிங்கிட் வரை பங்களிப்பதாக மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

அந்தத் துறையில், பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 16,728 நிறுவனங்களில் 74,500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

அடிப்படையான முடி திருத்தும் சேவைகள், முடி சிகிச்சைகள், நகப் பராமரிப்பு, முகப் பராமரிப்பு ஆகிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திரு.இஸ்மாயில் தெரிவித்தார்.

முடி திருத்தும் கடைகள் பல பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்