Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் Bitcoin உருவாக்கும் இயந்திரங்கள் வாகனம் ஏற்றி நொறுக்கப்பட்டன

மலேசியாவில் Bitcoin உருவாக்கும் இயந்திரங்கள் வாகனம் ஏற்றி நொறுக்கப்பட்டன

வாசிப்புநேரம் -

மலேசியக் காவல்துறை அதிகாரிகள், அதிரடி நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட Bitcoin எனப்படும் மின்னிலக்க நாணயங்களை உருவாக்கும் இயந்திரங்கள் மீது, கனரக வாகனத்தை ஏற்றி அழித்துள்ளனர்.

1000-க்கும் அதிகமான அந்த இயந்திரங்களை அதிகாரிகள் steamroller-உதவியால் நொறுக்கி அழித்தனர்.

அழிக்கப்பட்ட இயந்திரங்களின் மதிப்பு சுமார் 1.25 மில்லியன் டாலர்.

போர்னியோ தீவில் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம்வரை, அதிகாரிகள் நடத்திய சோதனையில் அந்த இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், இயந்திரங்கள் செயல்படத் தேவையான
மின்சாரத்தைத் திருடியதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

திருடப்பட்ட மின்சாரத்தின் மதிப்பு, 2 மில்லியன் வெள்ளி.

கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் மீது, மின்சாரம் திருடிய குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவர்களுக்கு 6 மாதச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

Bitcoin-களை உருவாக்க அதிகமான மின்சாரம் தேவைப்படும்.

மேலும் அந்த நடைமுறையின்போது, மின் விநியோகம் துண்டிக்கப்படலாம்.

திடீரென மின் விநியோகம் தடைபடுவது, உயிர்களுக்கும் உடைமகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதைக் காவல்துறையினர் சுட்டினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்