Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா : முன்னிலை ஊழியர்களுக்கும் மற்ற நோய்களுள்ள மூத்தோருக்கும் கூடுதல் தடுப்பூசி போடத் திட்டம்

மலேசியா, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு Booster Shots எனும் கூடுதல் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

மலேசியா, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு Booster Shots எனும் கூடுதல் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள பெரியவர்களில் 80 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட பின்பு, குறிப்பிட்ட பிரிவினருக்குக் கூடுதல் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கும் என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன்னார்.

முன்னிலை ஊழியர்களுக்கும், ஏற்கனவே மற்ற நோய்கள் உள்ள மூத்தோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எளிதில் COVID-19 நோய் தொற்றக்கூடியவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடுவதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கலாம் எனத் திரு. இஸ்மாயில் சப்ரி விளக்கினார்.

கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வழிகாட்டுமுறைகளை சுகாதாரப் பராமரிப்பு, மருத்துவத் துறை நிபுணர்கள் வகுத்து வருகின்றனர்.

மலேசியாவில் இதுவரை பெரியவர்களில் 78.2 விழுக்காட்டினருக்கு 2 முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 93.1 விழுக்காட்டினருக்கு ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்